தேமுதிகவை மறந்த டிடிவி தினகரன்.. போர்க்கொடி உயர்த்திய தேமுதிக ஆதரவாளர்கள்.! - Seithipunal
Seithipunal


கூட்டணி கட்சியை டிடிவி தினகரன் மறந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தேமுதிகவினர் போர்க்கொடி தூக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிநேரத்தில் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், திருவெற்றியூர் தொகுதி அமமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது, தனது கூட்டணி கட்சியான தேமுதிகவின் பெயரை கூற மறந்துவிட்ட்டார். இந்த விஷயத்தை கவனித்த தேமுதிகவினர் முறைப்படி தங்களை அழைக்கவில்லை என்றும், எங்களை அப்பகுதி அமமுக பகுதி செயலாளர் மதிப்பளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், அமமுக பிரமுகரை கூட்டணி சார்பில் தேமுதிக தரப்பில் இருந்து தொடர்புக்கொள்கையில், அவர்கள் சரியான பதிலும் அளிக்கவில்லை என்றும், இதனால் நாங்கள் அமமுகவை புறக்கணிக்கிறோம் என்றும் தேமுதிகவினர் விஜயகாந்தின் பெயரை சொல்லி குரலெழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

இதனையடுத்து டிடிவி தினகரனின் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், அங்கு வாடகைக்கு ரூ.200 பேசி அழைத்து வரப்பட்ட கோஷ்டியில், ஒரு கோஷ்டிக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அமமுக பிரமுகரை முற்றுகையிட்ட அக்கோஷ்டியின் தலைவி ரூ.200 பேசியபடி கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். 

மேலும், இன்று காலை 11 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நேரில் சந்திக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Forgot DMDK Name at Election Campaign Thiruvotriyur TN Election 2021


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->