கோவையில் "தாமரையை வீழ்த்துங்க".. பாஜகவினர் அதிர்ச்சி.. மழுப்பிய டிடிவி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வதிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். 

அவர் மேற்கொண்ட பரப்பறையின் போது தாமரை சின்னத்திற்கு பதிலாக குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டதோடு கோவையில் தாமரைச்சின்னத்தை வீழ்த்த நீங்கள் துணை புரிய வேண்டும் என கூறியதால் கூட்டணி கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

பிறகு சுதாரித்துக் கொண்ட டிடிவி தினகரன் எல்லாமே கூட்டணி சின்னம் தானே என மழுப்பலுடன் அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சியான பாஜகவை வீழ்த்த வேண்டும் என டிடிவி தினகரன் உளறியது பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV campaign Lotus symbol defects in Coimbatore


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->