கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்படும் மாற்றம்.! சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடரை நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் சட்டப்பேரவை கூட்ட தொடரை வேறு இடத்தில நடத்த தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகின.  

இதனைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து சட்டபேரவை தலைவர் சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சட்டப்பேரவை விதிகளின்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வேண்டும். அதன்படி கடந்த மார்ச் மாதம் கடைசியாக  சட்டப்பேரவை கூட்டம்  நடந்து முடிந்த நிலையில், மீண்டும் செப்டம்பர் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn legislative assembly meeting place change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->