பழங்குடியினர் மக்களுக்கு ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூபாய் 17.18  ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பழங்குடியின மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணைகள், பள்ளி பராமரிப்பு, பழுது பார்த்தல் பணிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 17.18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பழங்குடியினர் நலத் துறை கீழ்  செயல்பட்டுவரும் 92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்சு மற்றும் மேஜைகள் வாங்க 2.27 கோடி கோடியும், மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகளில், 324 இரண்டடுக்கு கட்டில்கள் வாங்க 58.59 லட்சம் ரூபாய் என மொத்தம் 2.85 லட்ச ரூபாய்  ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt new Govt Order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->