சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த 68 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், பாக். கடற்படை தாக்குதலில் குஜராத் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு 68 பேரை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது வன்கொடுமை செய்துள்ளதாகவும் அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை இன்று விட்ஸப்கார்னை செய்த நீதிமன்றம், "இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதனை மத்திய அரசு நாளை மறுநாள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவரவர் குடும்பங்களை சந்திக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN FISHER MAN ARREST ISSUE HC Division CASE


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->