தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இறுதியானது! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் கே.எஸ் அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. 

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெண் ஒருவரை நியமனம் செய்யலாமா என்ற ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குறித்தான அறிவிப்பு என்று வெளியாகலாம் என்று, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வை இன்று கே.எஸ். அழகிரி சந்திக்க உள்ளார்.

பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடக்க உள்ளது. அவருடன் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்னும் 6 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என்று, வலியுறுத்த உள்ளதாகவும், அதன் படியே அறிவிப்பு வெளியாகும்  தகவல் வெளியாகியுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Congress head again KS Alagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->