குஜராத் ஆளும் பாஜக அரசை எதிர்த்து கருத்து தெரிவித்த.. தமிழக பாஜக நிர்வாகி குஷ்பூ.! - Seithipunal
Seithipunal


பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்த வன்முறையில் குஜராத் மாநிலம் ரந்தீக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. 

இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானுவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் குஜராத் அரசு விரும்பினால் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் குற்றவாளிகள் 11 பேர் சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர். இது நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 


இந்நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். அப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்பட கூடாது.

அப்படி விடுதலை செய்யப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP khushbu support to Bilkis bano


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->