சனாதன தர்ம சர்ச்சை! உதயநிதிக்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் புரட்டாசி மாதம் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் மேற்கொள்ளப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் சனாதனம் தொடர்பான கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கருணாகர் ரெட்டி "சனாதன தர்மம் குறித்து மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அறங்காவலர் குழு தலைவராக மட்டுமில்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நபராகவும் கடும் கட்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மதம் வைத்து அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவதற்கும், சமுதாயத்தில் அமைதியின்மை கொண்டு வருதற்கும் நினைப்பவர்கள்தான் சனாதன தர்மம் குறித்து இப்படி பேசுவார்கள்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Devasthanam condemns Udayanidhi speech on SanatanaDharma


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->