மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் எழுப்பி கேள்வியும் - மத்திய அமைச்சரின் பதிலும்.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசினார்.

இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசுகையில், "இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது; 2022ஆம் ஆண்டில் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதற்க்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,

"இலங்கை சிறையில் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களை மீட்பது தொடர்பாக இலங்கையுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்.

இந்தியா - இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் மீனவர்களின் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunavukkarasar Muraleedharan Fishermen


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->