திமுக கூட்டணி கட்சி எம்.பி.,க்கு கொரோனா.!  - Seithipunal
Seithipunal


உலகத்தை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கமே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி வருகின்றன. முக்கியமா விமான சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. இதில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 12 ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஐந்து பேர் மீது கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசுக்கு கொரோன நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்" என்று திருநாவுக்கரசர் எம்.பி., தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunavukkarasar Corona


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->