தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தகுதியற்றவர் என திருமாவளவன் கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது "தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆர்.எஸ்.எஸ் தொண்டரை போன்று செயல்படுகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ் பணிகளை செய்யலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இது அவர் அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்.

அதேபோன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். ஆளுநர் ரவி திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. இப்படிபட்ட ஒருவர் சட்டப்பேரவையில் நாளை உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம்...?? திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்த கூடிய உரையாற்றுவதற்கு எந்த வகையிலும் ஆளுநர் ஆர்.என் ரவி தகுதியற்றவர்" என கடுமையாக விமர்சனம் செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan criticized TN Governor RN Ravi was unfit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->