தேனி பெரியகுளத்தை அதிரவைத்த அதிமுக வேட்பாளர்கள்., ஒட்டுமொத்தமாக 30 வேட்பாளர்களும்....,  - Seithipunal
Seithipunal


பெரியகுளம் நகராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேரணியாக வந்து, தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் அதிமுக சார்பாக போட்டியிட கூடிய வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு செய்வதற்கு முன்பாக, ஒரே நேரத்தில் 30 வேட்பாளர்களும், தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக வந்தனர்.

தென்கரை காந்திசிலை பகுதியிலிருந்து,  முப்பது அதிமுக வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அறையில், ஒருவர் பின் ஒருவராக வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பெரியகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தது பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THENI PERIYAKULAM ADMK CANDIDATES


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->