24*7 மது விற்பனை அம்பலமாகிவிட்டது! அமைச்சர் ஏற்பாரா? இல்லை அவதூறு என்பாரா? - Seithipunal
Seithipunal


தஞ்சை கீழ அலங்கம் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த விவேக் (36) என்ற இளைஞரும், குப்புசாமி என்ற முதியவரும் உயிரிழந்தனர்.

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, சட்டவிரோத மது விற்பனையால் இருவர் பலியானதாக புதிய தமிழகம், பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனையடுத்து, இருவரின் பலிக்கு காரணமான சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சீல் வைக்கப்பட்டது. 

மேலும், டாஸ்மாக் கடையின் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக விற்ற மதுபானத்தை வாங்கி கொடுத்த இருவர் உயிரிழந்தன் காரணமாகவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரின் பேரிலும், பார் உரிமையாளர் பழனி மீது தஞ்சை கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் வெளியான தகவலின் படி, மதுவில் சைனைடு கலந்ததால் தான் இருவரும் உயிரிழந்து உள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்து.

மேலும் கொலை செய்ய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது விஷம் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை சட்டவிரோத மதுவிற்பனை தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது அம்பலமாகியுள்ளது. எப்படியும் அமைச்சர் செந்தில் பாலாஜி இதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக நீங்கள் தமிழகம் முழுவதும் என்று எப்படி சொல்லலாம், நீங்கள் பார்த்தீர்களா? என்று தான் பதில் கேள்வி கேட்பார்.

லஞ்சம் வாங்கினால் (பாட்டிலுக்கு 10 ரூபாய்) கைது நடவடிக்கை கிடையாது, ஜஸ்ட் பணியிடை மாற்றம் தான் தண்டனை என்ற நிலையில் தானே தமிழகம் இருக்கிறது. 

ஆக...,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai TASMAC BAR issue Senthil Balaji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->