எங்களுக்கு ஏமாற்றம் தான்! நிலக்கரி சுரங்க ஏல ரத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலடி! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டிவிட்டர் பக்கத்தில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெங்களூரில் தன்னை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சேத்தியாதோப்பு, மைக்கேல் பட்டி, வடசேரி ஆகிய பகுதிகளில் நிலக்கரி திட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ஏலத்தை நீக்க கோரிக்கை விடுத்தார்.

இந்த மூன்று பகுதிகளிலும் நிலக்கரி திட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஏல பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது" என்று  மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "டெல்டாவின் மூன்று பகுதிகளுக்கான நிலக்கரி சுரங்க ஏலத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

இந்த மூன்று திட்டங்களும் தேவையற்றது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியது என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனு மற்றும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒருமித்த தீர்மானங்களை மத்திய அமைச்சர் ஏற்றுக் கொள்ளாமல், சுட்டிக்காட்டாமல் இருந்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

இருந்தபோதிலும் தமிழகத்தின் நல்லனுக்காக அனைத்து முடிவுகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உண்மையில் யார் தங்கள் நலனுக்காக பணி செய்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

மேலும் குழந்தையை கிள்ளுவது போல் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவது யார் என்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangam Thennarasu Say About Coal Tender cancel


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->