திமுக அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவித்து, விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு காலகட்ட திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு.

அந்த கலக்கத்தில் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மீதும் கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கில் இருந்து தங்கம் தென்னரசும் அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால், தங்கம் தென்னரசும் அவரது மனைவியை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangam Thennarasu case judgement 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->