தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal



மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. 

தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மற்றும் புதுச்சேரியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று முன்தினம் டெல்லிக்கு எடுத்துச் சென்றார். 

மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தேர்தல் குறித்து பரிசீலனை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் பரிசீலனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதா தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என பொறுப்பாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, வேட்பாளர் குறித்து இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தின் இறுதியில் வேட்பாளர்களை அறிவிப்போம். மக்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. எந்திரங்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. நாங்கள் மக்களை நம்பி தான் நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Congress candidate list


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->