தமிழகம் திரும்பினார்.. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


டெல்லி பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை திரும்பினார்.

4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், அங்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார்.

மேலும், அவர்களிடம் தமிழகம் சார்ந்த கோரிக்கை மனுக்களையும் அவர்களிடம் அளித்தார். மேலும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த மு க ஸ்டாலின் அங்குள்ள மாதிரி பள்ளியை பார்வையிட்டார்.

அதன்பிறகு டெல்லியில் கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு விமானம் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை வந்தடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu chief minister MK Stalin return to Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->