#BigBreaking || வன்னியர் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்? உச்சநீதிமன்றம் நோட்டிஸ்.! வன்னியர் இடஒதுக்கீடு ரத்து தொடரும்.! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று, உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமணன், "நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவால், ஏற்கனவே கலந்தாய்வு பாதிக்கப்பட்டுள்ளது, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க இயலாமல் இருக்கிறது, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் வாதங்களை முன்வைத்தார். 

மேலும், இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். இதே வாதங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களும் வாதத்தை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிகமான மனுக்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுமானவரை எழுத்து பூர்வமான வாதங்கள் நீங்கள் விரைவில் தாக்கல் செய்யுங்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க விரும்பவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அந்த தீர்ப்புக்கு தொடரும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி பிப்ரவரி 15, 16ஆம் தேதி வரை நடைபெறும். அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறைகள் அனைத்தும் தொடரும். இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை, புதிய பணி நியமனம், உள்ளிட்ட நடைபெற கூடாது என்று நீதிபதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து, எதிர் மனுதாரர்களுக்கு நீதிபதி அவர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து உடனடியாக விரிவாக பதிலளிக்க வேண்டும் என்றும் அதில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme Court SAY ABOUT Vanniyar Reservation case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->