இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை - உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


பெங்களூரு அடுத்த சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த அரசின் உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய நாட்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தும் ஈத்கா திடலில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக மாநில அரசு கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்தது. 

இதனை எதிர்த்து இஸ்லாமியர்களின் வக்ஃபு வாரியம் தொடர்ந்த வழக்கில், "இரண்டு ஏக்கர் நிலத்தில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம்" என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஈத்கா மைதானத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என்று அறிவித்ததது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court order to Eidgah case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->