நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்-தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. மனுத்தாக்கல் முடிவு தேதி பிப்ரவரி 4ம் ஆகும். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5-ம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள், பணம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களை பெற மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

State election commission introduced complaint nos


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->