ஸ்டாலின் பவர் ஸ்டார் இல்லை, 'பவர் கட் ஸ்டார்' - போட்டு தாக்கிய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியில் கரண்ட் பில் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது - நடிகை விந்தியா

அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுக் கூட்டத்தில் திமுக ஆட்சியின் செய்யப்பட்டுள்ள ஊழல்கள்,விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து அதிமுகவினர் பேசி வருகின்றனர். 

அவ்வாறு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா, விடியல் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்ன திமுக மதுவிலக்கை கொண்டு வரவில்லை. ஆனால் இன்று தெருவிளக்கு எறிய கூட மின்சாரம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் பேசிய விந்தியா "ஸ்டாலின் தன்னை பவர் ஸ்டார் என நினைத்துக் கொண்டுள்ளார். உண்மையில் ஸ்டாலின் ஒரு பவர் கட் ஸ்டார் தான்.

உலகில் எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் மின்சாரம் தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது" என கடுமையாக திமுக ஆட்சியை விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin was not Power Star Power Cut Star AIADMK spokesperson Vindhya


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->