வீட்டு வாசலில் கோலம் போட்ட திமுக.. வீட்டை சுற்றி கோலம் போட தயாராகும் பாமக, பாஜக: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி..! - Seithipunal
Seithipunal


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வித்தியாசமான முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் காவலர்களை கற்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு, மறுபுறம் பெண்களை வைத்து ரோஜாப்பூவினை காவலர்களிடம் கொடுப்பது போன்று போட்டோ எடுத்து அதனை ஆதரவு ஊடகங்கள் மூலம் பரப்புகின்றன.

மறுபுறம் பேரணி ஆர்ப்பாட்டம் என்று பரவலாக போராட்டம் நடைபெறுகிறது, இந்நிலையில் நேற்று சற்று வித்தியாசமாக சில மாடர்ன் பெண்கள் பொது இடத்தில் கோலம் போட்டு குடியுரிமை மசோதாவை எதிர்ப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது, இந்நிலையில் அவர்கள் பாணியில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது தங்கை கனிமொழி போன்றோர் தங்கள் வீடுகளில் குடியுரிமைக்கு எதிராக கோலம் போட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பலரும் தங்கள் வீட்டில் குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாகவும், மூலபத்திரம் எங்கே? என்றும் தங்கள் வீட்டு வாசலில் திமுக எடுத்த அதே பாணியை பின்பற்றி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது, திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டை சுற்றி மூலபத்திரம் எங்கே என கோலம் போட இருப்பதாக பாஜக, பாமகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக தலைமை அமைதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியில் சொன்னால் நீங்கள் தானே கோலம் போட்டதை ஆதரித்தீர்கள் இப்போது மட்டும் தவறாக தெரிகிறதா என்பார்கள்,.

தடுத்து நிறுத்தினால் மிக பெரிய அளவில் மூல பத்திரம் விவகாரம் வெளியே வரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துவருவதாக கூறப்படுகிறது, நாளை CAA ஆதரவாக, மூலபத்திரம் எங்கே என கூறி ஸ்டாலின் வீட்டு முன்பே கோலம் போட்டால் இந்திய அளவில் மானம் பறிபோகுமே என கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin kolam protest again caa and nrc issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->