பாகிஸ்தான் இஸ்லாமிய நாடே அல்ல!! சர்ச்சையை கிளப்பிய முக்கிய புள்ளி!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இந்தியா விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது. ஆனால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உபசரிப்பு ஏற்க முடியாது.

விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டுமே தவிர வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என தனது கருத்தை தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் எழுப்பியதற்கு தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "பாகிஸ்தான் வெறும் ஒரு அண்டை நாடோ மற்றொரு இஸ்லாமிய நாடோ அல்ல.. அது இந்து’க்களுடன் ஒன்றி வாழ சகிப்புத்தன்மை இல்லாத கருத்தியல்!அந்த கருத்தில் தோற்கடித்துக் கொண்டே இருக்கப்படும்! ஒவ்வொரு வெற்றியும் இந்தியர்களால் கொண்டாடப்படும்!" என பதிவிட்டு மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam krishnasamy said Pakistan is not an Islamic country


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->