#மேற்குவங்க_இடைத்தேர்தல் : மம்தா பானர்ஜியை ஆட்டம் காணவைத்த முதற்கட்ட முடிவு.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மகாராஷ்டிராவின் கஸ்பாபெத் மற்றும் சின்ச்வாட் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதனை தொடர்ந்து, பிப்ரவரி 27-ம் தேதி ராம்கர் (ஜார்கண்ட்), ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), சாகர்திகி (மேற்கு வங்கம்) மற்றும் லும்லா (அருணாச்சல பிரதேசம்) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு இந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.  

மேற்கு வங்க  மாநிலத்தின், சகர்திகி சட்டப்பேரவை தொகுதியில் நடந்த தேர்தலில் 2.3 லட்சம் வாக்காளர்களில் 73 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேபாஷிஷ் பானர்ஜியும்,  எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி திலீப் சாஹாவும், மற்றும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணியின் வேட்பாளராக பெய்ரோன் பிஸ்வாஸும் போட்டியிட்ட  இத்தொகுதியின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைகளின் முடிவின் படி காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி வேட்பாளர் பெய்ரோன் பிஸ்வாஸ் 515 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking Report For mamata banarjee On sadardighi Constituency round 1 results


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->