சமூக விரோத அமைப்புகளின் கூடாரங்கள் - சிவசேனா கட்சி கடுமையான தாக்கு! - Seithipunal
Seithipunal


சமூக விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருகன் தினேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்திலும், நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின் கூடாரங்களை சோதனை செய்து வருகிறது. 

இதன் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, சென்னை, ராமநாதபுரம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில், ஒரு அமைப்பு தொடர்புடைய அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ் ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

எனவே, சமூக விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் சார்பாக இன்று உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் மறுபடியும் ஒரு புகார் மனுவை அனுப்பி உள்ளோம்" என்று அட்சயா திருமுருகன் தினேஷ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shiva Saena say about Anti social


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->