ஜாமீனுக்கு கெஞ்சிய ''செந்தில் பாலாஜி''.!! முட்டுக்கட்டை போட்ட ED.!! நீதிமன்றம்‌ தடாலடி.!! நாளை? - Seithipunal
Seithipunal


சட்டவிரோதி பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கரூர் தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரணை நீதிபதி ஜே ஓகா இன்று விஜய் மதன்லாலுக்கு சிறப்பு பெஞ்ச் உள்ளதால் இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம் 330 நாட்களாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளனர் என எடுத்துரைக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாளை விசாரிக்கப்படும் என அறிவித்தார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீனை நிராகரித்த போது சென்னை உயர்நீதி மன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரித்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விசாரணையை தாமதப்படுத்தும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சுந்தரம் குற்றத்தின் முழு ஆதாரமும் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டது, முழு தடயவியல் அறிக்கையிலும் அந்த ஆவணம் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூற அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே ஓகா‌  நாங்கள் அதை வெள்ளிக்கிழமை வைத்திருப்போம், 15 நிமிடங்களுக்கு மேல் இல்லை என வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க முற்பட்ட அப்போது மீண்டும் குறுக்கிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சுந்தரம்‌ குறைந்தபட்சம் இடைக்கால ஜாமீனாவது கொடுக்க முடியுமா என்று யோசியுங்கள் என‌ கெஞ்சினார். அதனையும் நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே ஓகா அதை நாளை வைத்துக்கொள்வோம். அனைத்து தரப்பையும் கேட்க வேண்டும் என கூறினார்.

ஆனால் விடாமல் வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சுந்தரம்‌ அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது உண்மை என வாதிட்டதற்கு அவர் 300 நாட்கள் காவலில் இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் வாதித்ததை ஏற்க முடியாது. மற்ற வழக்குகளில் கைதானவர்கள் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டபோது தமிழாக்கத்துறை திறப்பு வழக்கறிஞரோ செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு பாஸ் பை பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமின் மனு விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்ட நாளில்‌ முதல் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்டது. இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அவருடைய ஜாமீன் கோரிக்கையை  நிராகரித்தது என வாதிட்டதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி வந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என ஒத்தி வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji request interm bail in ed case


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->