செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க ED தீவிரம்.!! அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பான புழல் சிறை.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத் துறை கைது செய்தது சரி என தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அமலாக்கத்துறை உடனடியாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி கொடுத்துள்ளனர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக புழல் சிறைக்கு விரைந்துள்ளனர். செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவின்படி காவல் நிலைய எடுத்து விசாரிக்க சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறையில் முகாமிட்டுள்ளனர்.

அமலாக்கத்துறையால் காவலில் எடுக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று இரவே கும்மிடிப்பூண்டி அல்லது சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமான விசாரணையின் பொழுது மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டியது வேண்டியது கட்டாயம் ஏற்கனவே மருத்துவர்கள். ஆனால் தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே மருத்துவர்களின் கண்காணிப்பில் புழல் சிறையில் இருப்பதால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நேரடியாக காலையில் எடுத்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். 

இன்று இரவுக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையில் தங்கள் விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதால் மருத்துவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சுமார் 60 சொத்து ஆவணங்களை முடக்கியுள்ள நிலையில் அது குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji who is in Puzhal Jail is taken into custody by ED


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->