காணாமல் போக போகும் திமுக.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கேகே நகர் சிவன் பார்க் எதிரிலுள்ள பொப்பிளி ராஜா சாலையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர், இலக்கிய அணி செயலாளர், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 25 வயது நிரம்பும்போது தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்தவர் எம்ஜிஆர். சிறுவனாக இருந்தபோது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்டேன். இது திராவிட மண். இங்கு யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க முடியாது. சிலர் நினைக்கிறார்கள் திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்கலாம் என்று ஆனால், அது முடியாது. ஏதாவது இடர்பாடுகள் வருமா என்று நாரி போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இடர்பாடுகள் வருவதற்கு நரிக்கு காலம் இடம் கொடுக்காது எனக் கூறினார். 

மேலும், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும். ஒரு முதல்வரை எப்படி மதிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிந்துகொள்ளவேண்டும். நாகரிகத்தோடு பேசுங்கள். ஏனென்றால் நாகரீகத்தை கொண்டுவந்த இயக்கம் திராவிட இயக்கம். அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு பின் திமுக இருக்கிறதா.? இல்லையா.? என்று பாருங்கள் என முதலமைச்சர் என்னிடம் கூறி உள்ளார். அவர் எதையோ மனதில் வைத்து உள்ளார். பொங்கலுக்கு நாங்க எல்லாம் 2000 கொடுக்கலாம் என கூறினோம். ஆனால் முதல்வர் 2500 கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sengottaiyan says about election plan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->