ஆடியோ வெளியிட்டா பாஜக எதிர்க்கட்சியா..? அப்போ சவுக்கு சங்கர்.. பங்கம் செய்த செல்லூர் ராஜூ..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை மதுரை மாநகர் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அதிமுகவின் பலம் வாய்ந்த எதிரி யார் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு "எப்பொழுதுமே அதிமுகவின் ஒரே எதிரி திமுக மட்டும் தான். அந்த குடும்பக் கட்சியை, ஊழல் ஆட்சியை ஒழிக்கும் வரையில் அதிமுக ஓயாது, ஒழியாது" என பதிலளித்த போது மேலும் ஒரு செய்தியாளர் அப்போது பாஜக..? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர் "மற்ற கட்சி எல்லாமே, பிஜேபி, காங்கிரஸ் எல்லா கட்சிகளுமே எங்களுடைய நண்பர்கள் தான். எப்பொழுது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வோம், விலகிக் கொள்வோம். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுமே எங்களுக்கு நண்பர்கள் தான். தமிழகத்தில் எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான்" என பதிலளித்தார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திமுகவை எதிர்த்து அதிமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் பாஜக வெளியிட்ட ஆடியோ மூலமாக தான் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போ தமிழகத்தில் பாஜக தான் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியா.? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு "ஒரு ஆடியோ வெளியிடுவதன் மூலமாக ஒரு செய்தி பரவுகிறது என்றால் அது தான் எதிர்க்கட்சியின் அளவுகோல் என்பது அதுவல்ல. 

அப்படி என்றால் இன்று பலர் யூட்டியூப் சேனல் வீடியோ மூலம் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். அப்படி என்றால் அவர்களே எதிர்க்கட்சியாக வந்து விடலாமே. பாஜகவின் மாநில தலைவர் ஆடியோவை வெளியிட்டாலும் அதனை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தது எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், எங்க கழகத்தின் நிர்வாகிகளும் தான். அண்ணா திமுக குரல் கொடுத்தால்தான் எந்த ஒரு செய்தியும் பெரிதாகும். பாஜக சொன்னதால் அது பெரிதாகவில்லை.

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புள்ளி விவரத்துடன் பேசினார். இதனால் முதலமைச்சரே பதட்டமானார். எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. ஆளும் கட்சிக்கு வலுவா எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி விளங்குகிறார். இன்னொன்று மக்கள் செல்வாக்கு வேண்டும். ஒருத்தர் குரல் கொடுத்தாலே பெரியாள் என்றால் யூட்யூபில் பேசும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்றவர்களும் தான் இருக்கிறார்கள்" என அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju questions Is BJP opposition party if PTR audio released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->