அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா லிஸ்டில் செந்தில் பாலாஜி.. பி.டி.ஆர் தான் மனசு வைக்கணும்..!! - செல்லூர் ராஜூ..!! - Seithipunal
Seithipunal


திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு "தினந்தோறும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மக்கள் மீது வரி மேல் வரி விதிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் துன்பப்படுவது முதல்வருக்கு தெரிகிறதா தெரியவில்லையா.?

சாலை வரியை கூட முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வறட்சி, பிரச்சனை, நமது உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் விட்டு கொடுத்துவிடுவார்கள். 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகமாக பெற்று தன் தலைவனுக்கு பணத்தை கொண்டு போய் சேர்த்த செந்தில் பாலாஜி இன்று சரியாக மாட்டிக்கொண்டார். பாலாஜி நெஞ்சுவலி என்று சொல்வதெல்லாம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காகத்தான்.

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா ஆகியோருக்கு வந்த நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக செந்தில் பாலாஜி நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றி உள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. செந்தில் பாலாஜிக்கு 3 மாத ஓய்வு கேட்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதயநிதி, சபரீசனின் 30ஆயிரம் கோடி ஊழல் குறித்து வாய் திறக்க மனசு வைத்தால் திமுகவினர் பலர் சிறைக்குச் செல்வது உறுதி.  அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது" என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju criticized minister senthil balaji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->