தி.மு.க தேர்தல் அறிக்கை... மற்றொரு முகம் - செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
sellur Raju Criticism dmk election manifesto
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
எங்களை பொருத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள். மதவாத இயக்கத்தை விட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தேர்தல் களத்தில் பொதுமக்கள் தான் எஜமானர்கள். மக்களை தான் தேடிச் செல்ல வேண்டும்.
தி.மு.க அரசும், பா.ஜ.க அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கை மூலம் இன்னும் எத்தனை காலம்தான் மக்கள் ஏமாறுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என தெரிவித்தார். ஆனால் அதை செய்தாரா. சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி தி.மு.கவின் மற்றொரு முகம் என தெரிவித்துள்ளார்.
English Summary
sellur Raju Criticism dmk election manifesto