செந்தில் பாலாஜி வழக்கு.. ED மன்னிப்பு கேட்டும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். செந்தில் பாலாஜியின் மனு மீது பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்றி விசாரணைக்கு இருந்த நிலையில் அமலாக்கத்துறை இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் எம்எல்ஏவாக செந்தில் பாலாஜி தொடர்வதால் அதிகாரமிக்க நபராகவே அவர் இருந்து வருகிறார். 

தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த கூடும் மற்றும் சாட்சியை கலைக்க கூடும் என அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் தாக்கல் செய்ததற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. 

இதனை அடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனக்கு ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc postponed senthil balaji bail pela on May6


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->