உத்தவ் தாக்கரேவின் அவசரம்.. ஷிண்டே ஆட்சியில் தலையிட முடியாது.. கை விரித்த உச்ச நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டசந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 16ல் ஒத்திவைத்தது.

சபாநாயகரின் அதிகாரம் தொடர்புடைய நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு உடனடியாக மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17ல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு வெளியானது.

சிவசேனா கட்சி, சின்னம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. அதேபோன்று நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

மேலும் சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது எனவும், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இந்த நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்துவிட்டதால் இப்போது முந்தைய நிலை தொடரும் என அறிவிக்க முடியாது எனவும், மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட முடியாதுஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC orders transfer of disqualification case to larger bench


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->