சனாதான வழக்கில் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மம் குறித்தான சர்ச்சை பேச்சில் சிக்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் டெங்கு மலேரியா கொசு போன்று சனாதன் தனத்தை அடியோடு அழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனம் இன்று விசாரணைக்கு வந்த போது சனாதான தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி எவ்வாறு ரீட் மனு தாக்கல் செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி வாதிட்ட உதயநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் அவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள், ஆனால் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பிரதிநிதி எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 403வது பிரிவின்படி ரெட் மனுவை திருத்தம் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc direct udhayanithi submit rit petition with correction


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->