வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியா.? மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 2027 வரை இந்த தடை தொடரும். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவால் போட்டியிட முடியாது. 

இதனை சட்டரீதியாக உடைக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சீக்கிய மாநிலத்தில் அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கு சிறை சென்றார். 2018ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்பட்டது. இருப்பினும் அவர் தேர்தல் ஆணையத்தில் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனு அளித்தார். அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு சலுகை வழங்கியது.

 

இதேபோன்று சசிகலாவுக்கும் சலுகை பெற்றுவிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில முக்கிய முடிவுகள் எடுத்து தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala may be contest the coming assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->