நடிகர் சரத்குமார் பாஜகவில் ஐக்கியம்.!! மொத்தமாக கலைந்து ச.ம.க.!! குஷியில் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முழுமையாக கலைக்கப்பட்டு பாஜகவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அக்கட்சியை முழுமையாக கலைத்த நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய சரத்குமார் "வருங்கால இளைஞர்களின் நலனுக்காக, மக்கள் நலனுக்காக பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜகவுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைகிறேன். பெருந்தலைவர் காமராஜ் போல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, மக்கள் பணியில் நாங்கள் தொடர்கிறோம்" என தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "தேசியத்திற்கு நடிகர் சரத்குமார் தேவைப்படுகிறார். சரத்குமாரின் தேவை தேசிய அளவில் தேவைப்படுவதால் அவரை மாநிலத்திற்குள் அடைக்க நான் விரும்பவில்லை" என கருத்து தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SarathKumar Samathuva makkal katchi join in bjp


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->