சென்னையில் ஒன்று கூடும் சங்பரிவார் அமைப்புகள்! அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசனை! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான செயல் திட்டங்கள் உருவாக்கவும் சம்பாரிப்பார் அமைப்புகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உட்பட 30க்கும் மேற்பட்ட சங் பரிவார் அமைப்புகளின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்க உள்ளது. சங்பரிவார் அமைப்புகள் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய மற்றும் மாநில அளவில் கூடி ஓராண்டு செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வது வழக்கம். 

இதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் இன்று தொடங்குகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச் செயலாளர் அருண்குமார், தென்னிந்திய தலைவர் வன்னியராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பாஜக உட்பட ஒவ்வொரு அமைப்பினரும் கடந்த ஓராண்டக செய்த பணிகள் சந்தித்த பிரச்சனைகள் சாதனைகள் குறித்தும் அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும் அறிக்கை வாயிலாக சமர்ப்பிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு தடை விதித்தது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடும் சங்க பரிவார் அமைப்பினர் கைது, தமிழக பாஜக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதே போன்ற எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவின் கூட்டணி உட்பட தேர்தல் வியூகங்கள், தேர்தல் பணிகளை சங் பரிவார் அமைப்புகளின் பங்களிப்பு, தேர்தல் பணிக்காக அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முழு நேர பணியாளர்களை நியமித்தல் உட்பட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sangh Parivar organizations meet in Chennai and discuss about politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->