#தமிழகம் || 2 சீட்டு விசிக., திமுகவை கண்டித்து தெருவுக்கு வந்த பஞ்சாயத்து.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாநகராட்சியில் 2 வார்டுகளை மட்டுமே திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டதால், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், திமுகவின் மாவட்ட செயலாளரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ஆங்காங்கே காரசாரமான விவாதங்களை நடத்தி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்மையில் கரூர் மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி வெளியே விரட்டியடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு, இரண்டு வார்டுகளை மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 20 பேர் மட்டுமே சாலை மறியல் போராட்டம் நடத்தியதால், எந்தவித பதட்டமும், பரபரப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இரண்டு இடங்கள் மட்டுமே கூட்டணி விசிக.,வுக்கு திமுக ஒதுக்கி இருப்பது, இந்த தேர்தலில் திமுகவுக்கு விசிக மறைமுகமாக பழிவாங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதேபோல் மதுரை மாநகராட்சியில் திமுக -விசிக இடையே பிரச்னை நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SALEM VCK PROTEST AGAINST DMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->