உதயநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை ஏற்கவில்லை..!! கரூர் மேயர் கவிதா விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாநகராட்சியில் உள்ள தெருவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதியின் பெயரை வைக்க வேண்டும் என திமுகவைச் சேர்ந்த 36 ஆவது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று முன்தினம் நடைபெற்ற கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அதனை திமுகவை சேர்ந்த 46 கவுன்சிலர்களும் ஆதரித்தனர். அதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் சர்ச்சையையும் உண்டாக்கியது. இதன் காரணமாக திமுக தலைமை நிலை நிர்வாகிகள் கரூர் மாநகராட்சி மேயர் கவிதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செய்வது அறியாத கரூர் மேயர் கவிதா அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளவில்லை என நேற்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "கரூர் மாநகராட்சி 36 வது வார்டு கவுன்சிலர் வசுமதி கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர். ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் கூறியது மைக்கில் தெளிவாக கேட்கவில்லை இதனால் தீர்மானம் பற்றி தவறான தகவல் வெளியாகி உள்ளது" என சமாளித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கடும் விமர்சனத்தால் உதயநிதியின் பெயர் வைக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resolution of Udayanidhi name was not accepted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->