பட்ஜெட் கூட்டத்தொடர்.. திருக்குறளை மேற்கொள்காட்டி குடியரசு தலைவர் உரை.!! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று முறை பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெறுகிறது. 

இதில் ஆண்டின் முதல் கூட்டம் ஆன பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும், இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வரவேற்கிறேன். 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் நேரத்தில் ராணுவ வீரர்களை நினைவுகூர்கிறேன். 

கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. ஓராண்டு காலத்திற்குள் 150 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம். சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது நாட்டின் 75% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது . பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. 

 ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ₨1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. ஏற்றுமதியில் நமது நாடு தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. உலகிலேயே இந்தியாவின் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.  உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றி வருகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ram nath kovind speech for budget 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->