பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - நாள் குறித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில்,  பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 

அப்போது வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது,

"ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும். பாராளுமன்றத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

இதனைப் போன்று மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும்.  அலுவல் நேரங்களில் உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கூட்டத்துடன் முடிவிற்கு பிறகும் பாராளுமன்ற வளாகங்கள் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்". என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajya Sabha Chairman Venkaiah Monsoon Session of Parliament


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->