ரசிகர்களே தயாராகுங்கள்., அழைப்பை விடுத்த ரஜினிகாந்த்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். உலகம் முழுவதிலும் தனக்கென ரசிகர்களை வைத்து பட வெளியீடன்று திருவிழாவை போல ரசிகர்களால் திரையரங்குகள் ஜோடிக்கப்பட்டு கொண்டாட்டமாக இருக்கும். திரையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்த ரஜினிகாந்தை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல்கட்சிகள் பல செயல்களை நிகழ்த்தி அந்தந்த கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் படி தெரிவித்தது.

கடந்த வருடங்களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு இருந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும்., ரசிகர்கள் தயாராக இருங்கள் என்று கூறியிருந்தார். பல வருடங்கள் ஆகியும் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனமாக இருந்து வந்த நிலையில்., சில உடல் நலக்கோளாறுகள் காரணமாகவும் திரைத்துறையில் இருந்து மெல்ல மெல்ல விலக்கம் அடைய துவங்கினார்.

இந்த சூழ்நிலையில்., தமிழகத்தின் அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அழைப்பு போன்ற காரணத்தால் கடந்த வருடத்தில் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த ரஜினிகாந்த் நமக்கு களப்பணியாற்ற காவலர்கள் வேண்டும் என்றும்., அரசியலுக்கு வருகிறேன்., நமது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்றும்., தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தை திறந்து உறுப்பினர்களை இணைக்க கூறி ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். 

இதனை ஏற்று கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்து களப்பணியில் தீவிரமாக இறங்கிய ரசிகர்கள் பொதுமக்களுக்கு சேவைகளை செய்ய துவங்கினார். இந்த நேரத்தில் தற்போது ரஜினி பேட்ட திரைப்படத்தில் நடித்து முடித்து., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சூழ்நிலையில்., தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்ற கட்டமைப்புகள் அனைத்தும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில்., அடுத்த சட்டமன்ற தேர்தலானது 2021 ம் வருடத்தில் நடக்கவிருக்கும் நிலையில்., மாவட்டம் தோறும் உள்ள அரசியல் கட்டமைப்பை விரைவாக முடிக்குமாறும்., வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகுவோம் என்றும்., தற்போது வரை சுமார் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini told about her fans to quickly join and construct rajini makkal mandram for MLA eletion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->