கட்சி மற்றும் வேட்பாளர்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.! - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு விசயத்தில் திருப்தியில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் என்று பேசியது ஊடகத்தில் பலவிதமாக வெளிவந்தது.

நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருவதாக சொல்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன் என சொன்னது 2017 டிசம்பரில் மட்டுமே.

மறைந்த தலைவரகளின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் வரத்தேவையில்லை. கட்சியிலிருப்பவர்கள் வந்தால் போதும். இதுதான் மாற்று அரசியல். எம்.எல்.ஏ, எம்.பியாக ஒருவரை ஆக்கி அழகு பார்ப்பது என்பது அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை.

தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன். தொண்டர்கள் சொல்வதை கேட்பவன் தலைவனல்ல. அரசியலில் பணம், பதவி, பெயருக்கு நான் வரவில்லை என 2017 டிசம்பரிலேயே கூறிவிட்டேன். நல்ல தலைவர்களை உண்டாக்குபவர்களே நல்ல தலைவர்கள். எனக்கு பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணா என கூறினார்.

மேலும், 60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு. புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன். 30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது என கூறினார்.

கடைசி வரை கட்சி பெயர் மற்றும் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini says about election candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->