ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்  - லாலு பிரசாத் யாதவ்.! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த எதிர் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதிலும், இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்திலும் ராகுல் காந்தி சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும். பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi should marry - Lalu Prasad Yadav


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->