பா.ஜ.க வென்றால் அரசியலமைப்பு அழிந்து விடும்... ராகுல் காந்தி கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் அரசியலமைப்பு அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்திய கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பதாவது, 

மக்களவைத் தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார். நீங்கள் முழு பலத்துடன் வாக்களிக்கவில்லை என்றால் அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். 

பா.ஜ.க வெற்றி பெற்றால் அரசியலமைப்பு அழிந்துவிடும். நடுவர்கள் பிரதமர் நரேந்திர மோடியால் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். எங்களது அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் போட்டிக்கு முன்பாகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் எங்களது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவால் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi criticizes BJP 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->