பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை நாளை திருமணம் செய்ய உள்ளார்.

டெல்லியை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைபற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மன். இவர் சினிமாவில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இண்டர்ப்ரீத் கவுர் என்பவருடன் முதல் திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரை கடந்த 2016ஆம் ஆண்டே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

நாளை குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சில அரசியல் தலைவர்கள் மட்டும் காத்துக்கொள்ள உள்ளனர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab chief minister bhaghawant Maan getting second marriage


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->