#தமிழகம் || உங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை., எங்களை வாழ விடுங்கள் என்று கேட்கிறோம்.! மண்டியிட்டு கெஞ்சிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு, மாற்று வழியில் கால்வாயை அமைக்கக்கோரி, புதுக்கோட்டை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் கனவு திட்டமான காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மொத்தம் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம் செயல்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும்நிலையில், நத்தம்பண்ணை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அந்த பகுதியில், அந்த நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்வதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த திட்டத்தை குடியிருப்பு பகுதியில் செயல்படுத்த வேண்டாம், மாற்று பகுதியில் மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி அந்த குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது சாலையில் பெண்கள் மண்டியிட்டு, கும்பிட்டு, "எங்களை வாழ வழி விடுங்கள்., இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை., இந்த திட்டத்திற்கு குடியிருப்பு பகுதி வழியாக செல்லாமல், மாற்றுப்பாதையில் திட்டத்தை நீங்கள் செயல் படுத்திக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUKOTTAI NATHTHAMPANNAI PEOPLE PROTEST


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->