குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்தார்.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல் செய்தார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Presidential election Opposition common candidate Yashwant Sinha files nomination


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->