குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாநிலங்களில் சட்டசபை வளாகங்கள் என 31 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து ஓட்டு பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டன. ஒவ்வொரு இடத்தில் இருந்தும் விமானத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் முன் பகுதி இருக்கையில், உதவி தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு, கண்காணிப்புடன் ஓட்டிபெட்டிகள் டெல்லி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இமாசலபிரதேசத்தில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக ஓட்டு பெட்டி டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த நிலையில் நாளை ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது தெரிந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President election tomorrow vote counting


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->