குடியரசுத் தலைவர் தேர்தல் : பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பிஜூ ஜனதா தளம் கட்சி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு தமிழகத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பழங்குடியினப் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் ஆளும் முதலமைச்சர்கள் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக மற்றும் எதிர்க்கட்சி சார்பில்லாத கட்சிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில், பிஜு ஜனதா தள கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தனது ட்விட்டர் பக்கத்தில் ,"ஒடிசாவின் மகள் திரௌபதி முர்முவை நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க, கட்சி எல்லைகளைக் கடந்து, ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருமனதாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President election Biju Janata party support Draupadi Murmu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->